Saturday, April 09, 2005

Our Intelligent Captain!!!

நமது அதிபுத்திசாலி கேப்டன்!

இந்திய அணியின், பாகிஸ்தானுக்கு எதிரான, அவமானமிக்க பெங்களூர் டெஸ்ட் தோல்வியைத் தொடர்ந்து, அணி வீரர்கள் பொது மக்களிடம் தங்கள் முகத்தை காட்ட விரும்பாமல் தங்கள் ஹோட்டல் அறைகளிலிருந்து வெளியே வருவதை அறவே தவிர்த்தார்கள்!

ஆனால், திருவாளர் கங்குலிக்கோ, அறையில் அடைந்து கிடப்பதை விடவும், வெளியில் சென்று ஊர் சுற்றவும் ஷாப்பிங்க் செய்யவும் மிகுந்த ஆசை! எனவே, ஒரு சர்தாஜி போல மாறுவேடமணிந்து, ஹோட்டலை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு இளம்பெண், "ஹாய் சவுரவ்! எங்கே கிளம்பி விட்டீர்கள்?" என்றாள்.

ஆச்சரியப்பட்டுப் போன நமது கேப்டன் திலகம் விரைந்து தனது அறைக்கு சென்று, இம்முறை ஒரு முஸ்லிம் பெண் போல் உடை/புர்கா அணிந்து, ஹோட்டலை விட்டு வெளியே செல்ல யத்தனித்தபோது, முதலில் சந்தித்த அதே பெண், "ஹாய் சவுரவ்!" என்று கூறி புன்னகை பூத்தாள்!

துணுக்குற்ற நமது பெங்காலி பாபு, அறைக்கு சென்று கடைசி முயற்சியாக, மிகுந்த சிரமப்பட்டு தன்னை ஒரு ஹிப்பி போல சிங்காரித்துக் கொண்டு, ஹிப்பியின் நடை உடை பாவனையோடு ஹோட்டலை விட்டு வெளியேற முயன்றபோது, அதே பெண் மறுபடியும், "ஹாய்! சவுரவ்" என்றவுடன், மிகுந்த கடுப்பும், அதிர்ச்சியும் அடைந்த கங்குலி, "எப்படி நான் யாரென்று சுலபமாக கண்டு பிடித்து விடுகிறாய் ???" என வினவ, அந்த பெண் சிரித்தபடி கூறினாள், "தாதா! நான் தான் VVS லஷ்மண்!!!"

என்றென்றும் அன்புடன்
பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails